மாஸ்க் அணியாமல் சென்றவரை தாக்கிய பொலிஸார் – விளைவு சிறுநீரக பிரச்சினை

Share With Your Friends

சில தினங்களுக்கு முன்னர் தமிழ்நாட்டின் சாத்தான்குளம் காவல்நிலையத்தில் மகன் தந்தை இருவரும் சித்திரவதை செய்து படுகொலைகள் மிகப்பெரும் சோகத்தையும் அதிர்வலைகளையும் ஏற்படுத்தியுள்ள நிலையில், மீண்டும் தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் ஒரு போலிஸாரின் அராஜக செயல் நடைபெற்றுள்ளது.
கடந்த ஜூன் 9ம் தேதியன்று காயல்பட்டினம் குத்துக்கல் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த கொரோனா கட்டுப்பாட்டு பகுதி வழியாக 32 வயதான ஹபீப் முகமது என்பவர் முகக்கவசம் அணியாமல் சென்றிருக்கிறார். பொலிஸார் இதனை காரணமாக கொண்டு ஹபீப்பை காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்று கடுமையான முறையில் சித்திரவதை செய்து தாக்குதலுக்கு ஆளாக்கியுள்ளார்கள்.

அதனைத் தொடர்ந்து நெல்லையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறுநீரகம் பாதிக்கப்பட்டு டயாலிஸிஸ் செய்யும் நிலைக்கு ஹபிப் சென்றுள்ளார் என அங்குள்ள டாக்டர்கள் கூறுகிறார்கள். இக் கொடுமையான விடயம் தொடர்பாக அவரது குடும்பத்தினர் லட்சம் செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
இதனை யார் பொறுப்பேக்க முடியும்? இவ்வாறான தவறுகள் தமிழ்நாட்டில் நடந்து கொண்டு தான் இருக்கின்றது. கொரோனாவை விட இவர்களின் செய்றபாடு அதிகமாக உள்ளது என நொட்டிஷன்கள் கூறுகிறார்கள்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *