
கொரோன காரணமாக பள்ளிகள் , யூனிவெர்சிட்டி அனைத்தும் பூட்டப்பட்டுள்ள நிலையில் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புக்கள் நடாத்தி வருகிறார்கள் . இதில் உள்ள பாதகத்தினை சுட்டிக்காட்டி வழக்கு தொடர்ந்துள்ளனர் சிலர்.
ஆன் லைன் வகுப்புக்களை நடத்துவதனால் மொபைல் , லேப் டாப் மூலம் பார்ப்பதால் மாணவர்களின் கண்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், தரம் 1 முதல் 5 ம் வகுப்பு வரை ஆன்லைன் வகுப்புக்கள் நடத்த தடை விதிக்க வேண்டும் என்று விமல் மோகன் என்பவரும் வழக்கு தொடர்ந்திருந்தார். மேலும் இவர் கூறுகையில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 2 மணி நேரம் மாத்திரமே ஆன்லைன் வகுப்புக்கள் நடத்தப்பட வேண்டும்.
இவ் ஆன் லைன் வகுப்புக்களில் கலந்து கொள்ளும் மாணவ, மாணவியர்களுக்கு போது ஆபாச இணைய தளங்களை பார்க்காதவாரு கவனம் சிதைவதால் படிப்பில் முழுமையாக இருக்க வேண்டும் மற்றும் அந்த இணையதளங்களை மாணவ, மாணவியர் அணுக இயலாத வகையில் விதிகளை வகுக்கும் வரை ஆன் லைன் வகுப்புக்களுக்கு தடை விதிக்கக் கோரி சரண்யா என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்திருந்தார்.