15ம் திகதி இலவச புத்தகங்கள் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

Share With Your Friends

அரச பாடசாலையில் தரம் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு படிக்கும் அரசு நிதி உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கான விலையில்லாத பாடப்புத்தகங்கள் அந்தந்த பள்ளிகளில் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. எந்த தினத்தில் புத்தகங்களை பெற பள்ளிக்கு வரவேண்டும் என்பதை முன்கூட்டியே மாணவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் எண்டு பாடசாலை நிருவாக்கத்துக்கு கூறியுள்ளார்கள்.

இதனடிப்படையில் ஜூலை-15ம் தேதி புத்தகங்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து அரச பள்ளியிலும் ஜூலை 15ம் திகதி 20 மாணவர்கள் மாத்திரம் 1 மணி நேரத்திற்கு வரவழைத்து சமூக இடைவெளியுடன் பாடப்புத்தகங்கள் வழங்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

மேலும் கொரோனாவால் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள மாணவர்கள், அவர்கள் பகுதிகளில் பாதிப்பு நீங்கியபிறகு மாணவர்களும், அவர்களது பெற்றோர்களுடன் தங்களது பள்ளிகளுக்கு வந்து இலவச பாடப்புத்தகங்களைப் பெற்றுக் கொள்ளலாம் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *