
தமிழ் நாடு அரசு கலை கல்லூரிகளில் விண்ணப்பிக்க கடைசி தேதி, கட்டண விவரங்கள் இன்று வெளியாகியுள்ளது. மாணவர்கள் உரிய நேரத்திற்கு இவற்றினை பெற்றுக்கொள்ளுமாறும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இணைத்தளம் ஊடாக அரசு கலை கல்லூரிகளில் விண்ணப்பிக்க ஜூலை 20ம் திகதி இருந்து ஜூலை 31ம் திகதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் www.tngasa.in, www.dceonline.org இணைத்தளத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் இணையதள வாயிலாக சான்றிதழ்களை ஜூலை 25ம் திகதி துவங்கி ஆகஸ்ட் 5ம் திகதி வரை பதிவேற்றலாம். பொதுப்பிரிவினர் 48 ரூபாய் விண்ணப்ப கட்டணம் மற்றும் 2 ரூபாய் பதிவு கட்டணத்தை இணையதள வாயிலாக செலுத்தலாம். இதில் எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது. பதிவு கட்டணம் 2 ரூபாய் மட்டும் செலுத்த வேண்டும்.அல்லது The director, directorate of college education chennai-6 என்கிற பெயரில் 18.7.2020 வங்கி கட்டணம் செலுத்தலாம். மேலும் கல்லூரி கல்வி இயக்கம் நேரடியாகவும் கட்டணம் செலுத்தலாம் எனவும் தெரிவித்துள்ளது.