
ரஷ்யாவின் முதல் கோவிட்19 தடுப்பூசி சுகாதார அமைச்சின் ஒப்புதலைப் பெற்று தற்போது வெளியிடப்பட்டுள்ளது. மேலும் ரஷ்ய சுகாதாரஅமைச்சின் கமலேயா தொற்று நோயியல் மற்றும் நுண்ணுயிரியல் தேசிய ஆராய்ச்சி மையம் உருவாக்கிய தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனைகள் முடிந்துவிட்டதாக முன்னதாக சுகாதார அமைச்சர் கூறினார்.
ஜனாதிபதியின் மகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது என்று புடின் கூறுகிறார். உலகின் முதல் கொரோனா வைரஸ்தடுப்பூசிக்கு தனது நாட்டின் சுகாதார அமைச்சு அறிக்கை அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் தனதுமகளுக்கு ஏற்கனவே மருந்து அளிக்கப்பட்டதாக கூறினார்.